பொன்விழா ஆண்டை கொண்டாடிய திருச்சி அதிமுகவினர்!

Trichy AIADMK celebrates Golden Jubilee year

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனால் துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்குத் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன் பின்னர் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு பரஞ்ஜோதி இனிப்புகளை வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கே.கே. பாலசுப்பிரமணியம், மாவட்டக் கழக துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட பொருளாளர் சேவியர், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எல். ஜெயக்குமார், கோபு நடராஜன் மற்றும் ஸ்ரீரங்கம் ரவிச்சந்திரன், ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அதிமுக முன்னணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

admk golden jubilee trichy
இதையும் படியுங்கள்
Subscribe