Advertisment

முதல்வர் எடப்பாடியின் நிழலுக்கு திருச்சி ஆவின் சேர்மன் பதவி! திருச்சி அரசியலில் புதிய அணி உருவாக்கும் முயற்சி!

kar

முதல்வரின் நிழல் என்று வர்ணிக்கப்படும் சி.கார்த்திகேயன் – 18வது வார்டு வட்ட செயலாளராக இருந்தவர். 2006 வருடம் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் அ.தி.மு.க.விலிருந்து வட்ட செயலாளர் பதவி வேண்டாம் என்று எழுதி கொடுத்து வெளியே வந்தவர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் துணையோடு மணப்பாறை சிவா, ஆகியோருடன் இணைந்து தில்லைநகர் 11வது கிராஸில் மித்ரா புரோமோட்டோர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆரம்பித்தார்.

Advertisment

கார்த்திகேயன் அப்பா சின்னத்துரை திருச்சியில் துணை தாசில்தாராக இருந்தவர். ராமஜெயத்திடம் உள்ள நெருக்கத்தில் அவரை திருச்சி மாநகர தாசில்தாரராக கட்டாய பதவி உயர்வு கொடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை எல்லாம் லிஸ்ட் பட்டா போட்டு கொடுப்பதில் பல கோடி திரட்டியிருக்கிறார். அப்போது வெள்ள நிவாரணத்திற்கு கொடுத்த பணத்தை முறைகேடு செய்தார் என்கிறார். புகாரும் எழுந்தது. தி.மு.க. ஆட்சி முடிந்தவுடன் 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மரியம்பிச்சையுடன் இணைந்து மீண்டும் அ.தி.மு.க உள்ளே நுழைந்தவர். மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த போது அந்த யூனோவா காரில் உள்ளே இருந்தவர் இந்த கார்த்திகேயன் என்பது குறிப்பிடதக்கது.

Advertisment

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கார்த்திகேயன் அப்பா உதவியுடன் கவுன்சிலர் சீட்டு வாங்கியவுடன் ஜெயித்தார். மரியம்பிச்சையின் உதவியால் சென்னையில் உள்ள சினிமா புரோக்கர் இவருக்கு நெருக்கமாகவும் அவர் மூலம் அமைச்சர்கள் ரமணா, தங்கமணி, வேலுமணி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானார். இவர்கள் அனைவரும் ஜெ. ஆட்சியில் இருக்கும் போது சங்கம் ஓட்டலுக்கு கார்த்திகேயனுடன் இந்த அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.

இவர்களின் நெருக்கத்தினால் கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் கிடைத்ததும் அவர் மூலம் மாவட்ட செயலாளர் சிபாரிசு இல்லாமல் மாவட்ட மாணவர் அணி பொறுப்பு கிடைத்து. அதன் பிறகு நெடுஞ்சாலைதுறையில் திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை அத்தனை அதிகாரிகளையும் தன் கையில் வைத்துக்கொண்டு டிரான்பர்ஸ்லிருந்து டெண்டர் ஓப்பந்தம் இவர் தான் எல்லாமும் தான். புதுப்புது பாணியில் முதல்வரின் நிழலாகவே மாறிவிட்டார் என்கிறார்கள்.

முதல்வரின் நிழல் ஆன பிறகு அவரின் உதவியுடன் கட்சியின் மா.செ.வா முயற்சி பண்ணினார். இதனால் அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், மா.செ. குமார் ஆகியோரின் எதிர்ப்பை சம்பாதித்தாலும் முதல்வரிடம் உள்ள நேரடி தொடர்பினால் தற்போது போட்டியின்றி ஆவின் சேர்மாக பொறுப்பேற்றிருக்கிறார். தற்போது திருச்சி திருமணம், ஸ்ரீரங்கம் என சுற்றுப்பயணம் வரும் தமிழக முதல்வர் எடப்பாடிக்கு திருச்சி மாநகர் முழுவதும் பிளக்ஸ் வைத்துள்ளார்.

k

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் ஆவின் நிர்வாகக்குழு உறுப்பின ர்களுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலில் 4 மாவட்டங்களில் இருந்து 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தநிலையில் திருச்சி கொட்டப்பட்டுவில் உள்ள ஆவின் நிர்வாக அலுவலகத்தில் தலைவர், துணைத்தலைவர் ஆகியோருக்கான தேர்தல் நடந்தது. அப்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளரான சி.கார்த்திகேயன் தலைவராகவும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த தங்க.பிச்சைமுத்து துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருச்சி ஆவின் அலுவலகத்தில் தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா நேற்று மாலை நடந்தது. திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் எம்.பி. தலைமை தாங்கினார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. வரவேற்றார். அதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலையில் ஆவின் தலைவராக சி.கார்த்திகேயன் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரை தொடர்ந்து துணைத்தலைவராக தங்க.பிச்சைமுத்து, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக கோவிந்தராஜூ(கல்லடிப்பட்டி), செல்வராஜ்(மணப்பாறை), ஆராய்ச்சி குமரவேல்(முசிறி), சுப்பிரமணி(கரூர் சுக்காலியூர்), சுப்பிரமணியன்(மேலபஞ்சப்பட்டி), செல்வராசு(பெரம்பலூர் வேப்பந்தட்டை), குணசீலன்(குன்னம்), சரஸ்வதி(முசிறி மங்கலம்), லட்சுமி(துறையூர் கலிங்கமுடையான்பட்டி), தேவி(அத்திப்பாளையம்), தாமரைச்செல்வி( பெரம்பலூர் திருப்பெயர்), தனசங்கு(அரியலூர் வெளிபிரிங்கியம்), நாகராஜன்(ஆலத்துடையான்பட்டி), சகுந்தலா (வைத்தியநாதபுரம்), தங்கையன்(தழுதாழைமேடு) ஆகியோரும் பொறுப்பேற்று கொண்டனர்.

பதவி ஏற்றவுடன் கார்த்திகேயன் ஏற்கனவே ஆவின் சேர்மாக இருந்த முன்னாள் எம்.பியும் தற்போது அமைப்பு செயலாளருமான இளவரசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். வாழ்த்தின் போது இளவரசன் கார்த்திகேயனுக்கு ஆவின் சேர்மன் பொறுப்பில் இருந்து எப்படி வேலை செய்ய வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்கிற டிப்ஸ் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்பி இருக்கிறார்.

புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட முதல்வரின் நிழல் கார்த்திகேயன் தற்போது திருச்சி அரசியலில் புதிய அணி உருவாக்குவார் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறார்கள் கட்சியினர்.

kamal kamalhaasan politics viswaroopam2 Chief Minister Edappadi aavin trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe