Skip to main content

போலிஸ் எப்போதுமே திருடர்கள் பக்கம் தான் ! பாடம் சொல்லி தரும் பொதுமக்கள் ! 

Published on 09/06/2019 | Edited on 09/06/2019

 


தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து காவல்நிலையங்களிலும் இதே கதை தான் நடக்கிறது. திருட்டு போனதாக புகார் கொடுத்தால் நம்மை சுற்றியே விசாரிப்பதும், ஒரு வேளை திருடனையே பிடித்துக்கொடுத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுதையே தொழிலாக வைத்திருக்கிறார்கள் போலிஸ்காரர்கள் என்பதற்கு துறையூரில் நடந்த சம்பவமே சாட்சி.

f

 

திருச்சி துறையூர் பாலக்கரை பகுதியில் ஓட்டலுக்கு சென்ற 50 வயது  பெண் ஒருவர் 3 ஐஸ்கிரீம் வாங்கியுள்ளார். கல்லாவில் உள்ள கடை முதலாளியின் மனைவியிடம் ரூ2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அவர் பில் தொகை 150 ரூபாய் என்று சொல்லிவிட்டு மீதி 1850 ரூபாய் கொடுத்துள்ளார். 

 

ஐஸ்கிரீம் வாங்கிய அந்த பெண் மூன்று 500 ரூபாய் நோட்டுகளை சுருட்டி ஜாக்கெட்டுக்குள் வைத்து கொண்டு 1500 ரூபாய் கொடுங்க என்று திரும்பவும் கேட்டு பிரச்சனை பண்ண, அதிர்ச்சியடைந்த முதலாளியின் மனைவி இப்ப தானே மீதிபணத்தை கொடுத்தேன்.  நீங்க அந்த பணத்தை சுருட்டி உங்க ஜாக்கெட்டுகள் வைச்சீங்க என்று சொல்ல மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்த பெண் வேறு வழியில்லாமல் அசடு வழிந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்து மிரட்டி அனுப்பி வைத்தனர். 

 

அதே போன்று 20 வயது உடைய ஒரு பெண் துறையூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று தாலிக்கயிற்றில் கோர்க்கும் காசு வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் கடையின் முதலாளி வெளியே சென்று இருந்ததால் அந்த நேரத்தில் கடையை கவனித்துக்கொண்டிருந்த முதலாளியின் மனைவி காசு எடுத்து காட்டியுள்ளார். உடனே அந்த பெண் தங்ககாசு பார்ப்பது போன்று பாவலா காட்டி அந்த தங்க காசை பர்சில் போட்டு விட்டு கவரிங் காசு ஒன்றை வெளியே எடுத்து பார்பது போல் பாவலா காட்ட இதை கவனித்த முதலாளியின் மனைவி இது நான் கொடுத்த தங்க காசு கிடையாது என்று வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இடமே ரணகளமானது. இதை அறிந்த பக்கத்துகடைக்காரர்கள் போலிசிடம் தகவல் கொடுத்த உடனே வந்த போலிஸ் அந்த 20 வயது பெண்ணின் பர்சில் சோதனை செய்த போது உள்ளே புதிய தங்க காசு இருந்தது. 

 

இந்த நிலையில் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட ஓட்டல் உரிமையாளர் அந்த பக்கம் சென்று கொண்டிருந்த போது நகைக்கடையில் என்ன இவ்வளவு கூட்டம் என்ன பிரச்சனை என்று உள்ளே சென்று பார்த்த போது அந்த 20வயது பெண்ணுடன் அவரை ஏமாற்ற முயன்ற 50வயது பெண்ணும் அங்கே இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து இந்த பொம்பளைங்க இதே வேலையாகத் தான் சுத்திக்கிட்டு இருக்காங்க என்று தன் கடையில் எப்படி ஏமாற்ற முயன்றார்கள் என்பதை அங்கிருந்த போலிசிடம் விளக்கமாக சொல்லி இவர்கள் மீது வழக்கு போடுங்கள் நாங்க புகார் கொடுக்கிறோம் என்று சொல்லி அந்த பெண்களை போலிசிடம் ஒப்படைத்தனர். 

 

இந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறையூர் போலிசிடம் புகார் கொடுத்தனர். ஆனால் துறையூர் போலிசோ உங்களுக்கு தான் பொருள் எதுவும் திருட்டு போகலையே, இழப்பு எதுவும் இல்லை தானே ! இதை பெரிசு படுத்தாம போங்க என்று புகார் கொடுத்தவர்களை அனுப்பி வைத்தனர் துறையூர் போலிசார். 

 

திருடனை பிடித்துக்கொடுத்தால் அவர்களை விட்டு விடுவதையே வேலையா வச்சிருக்கீங்க, என்று திட்டி தீர்த்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினார்கள். 

சார்ந்த செய்திகள்