Skip to main content

பிரமாண்டமாக துவங்கியது.. புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு மாநாடு !

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள  புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி தமுஎகச சார்பில் “கல்வி உரிமை பாதுகாப்பு மாநாடு”திருச்சியில் இன்று காலை 23.08.2019 ஆரம்பமானது.

 

a


கல்வி மாநில பட்டியலில்தான் இருக்க வேண்டும்  என்கிற கோரிக்கையுடன் இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள் . ‘ஒடுக்கும் கல்வியும் விடுதலைக் கல்வியும்’, ‘மறுக்கப்படும் சமூக நீதி’,  ‘அரசியல் சட்டத்தை மறுக்கிறதா’, ‘குழந்தைகளின் மூளை வளர்ச்சித் திறன்’, ‘கலைகளும் கல்வியும்’, ‘சமூக உரையாடலாகக் கல்வி’, ‘பழங்குடியினரின் கல்வி உரிமை என்னவாகும்’, ‘மாணவர் கண்ணோட்டத்தை மறைக்கும் வரை வறிக்கை’, ‘பள்ளிக் கல்விக்கு நேரும்  பாதகங்கள்’, ‘உயர்கல்வி இனி  யாருக்கு’, சிறுபான்மை நிறுவனங்கள்  எதிர்கொள்ளும் அபாயங்கள்’, ஆகிய  தலைப்புகளில் கல்வியாளர்கள், மருத்துவர்கள், இயக்குநர்கள், திரைக்  கலைஞர்கள் கருத்துரை வழங்க உள்ளனர்.

 
 மதியம் இயக்குநர் ரஞ்சித், எழுத்தாளர் கீதா உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள்..

 

a

 

முனைவர் சந்திரகுரு எழுதிய  ‘தேசிய கல்விக் கொள்கை 2019 பின்னணியின் மர்மங்கள்’ என்ற நூலை  புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  க.கோவிந்தராஜ் வர்தனன் வெளியிட பனான லீப் ரெஸ்டாரண்ட் ஆர். மனோ கரன் பெற்றுக் கொள்கிறார். ‘மக்கள் எழுச்சியை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் மாநிலத் தலைவர் சு. வெங்கடேசன் தலைமையில் நடை பெறும் பொதுக்கூட்டத்தில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டி தொடக்கவுரையாற்றுகிறார்.

 

புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, கனி மொழி எம்.பி., திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  துரை ரவிக்குமார் எம்.பி., வெ.ஈஸ்வ ரன் (மதிமுக), துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழகம்) உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்கின்றனர். மதுக்கூர் ராமலிங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். மேலும் கலை நிகழ்ச்சிகள், நாடகம், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

a

இந்த மாநாட்டில் புதிய கல்வியை ஏன் நிராகரிக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள். ?

 

பாஜக அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை அமலானால் கல்வி முற்றிலுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும். 3 பல்கலைக்கழங்கள்தான் இருக்கும் என்றும், 30 குழந்தைகளுக்கு கீழ்  உள்ள பள்ளிகள் மூடப்படும் உள்ளிட்ட பல்வேறு அபாயகரமான திட்டங்  களை கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.  பல்வேறு தேசிய இனங்கள் வாழும்  நாட்டில், 3ஆம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்கு மத்திய அரசுதான் கல்விக் கொள்கையை உருவாக்கும் என்றால் அது ஏழை, எளிய குழந்தை களின் கல்வியை பாதிக்கும். அமெ ரிக்காவில் தேசிய கல்விக் கொள்கை  கிடையாது. அந்ததந்த மாநிலங்கள் தான் கல்விக் கொள்கையை தீர்மானிக்கின்றன.

 

பிரதமர் தலைமையில் ஏன் கல்விக்  கொள்கை கொண்டு வர வேண்டும். கல்வியாளர்களே இல்லாத குழு  எப்படி தரமான கல்விக் கொள்கையை  உருவாக்க முடியும். மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே  தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டும்.  தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

 

சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கி விட்டு 12 மொழிகளில் மட்டும்  வெளியிட்டுள்ளன. இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். அனை வருக்கும் சமமான கல்வியை மறுக்கப்  படும். இனிமேல் கற்றுக் கொடுப்பது என்பது கிடையாது. கோச்சிங் சென்டர்  மூலம்தான் பயில வேண்டும்.

 

இனி  அரசு கட்டணத்தை நிர்ணயம் செய் யாது. அவரவர்கள் விருப்பத்திற்கு கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ளலாம் எனவும் புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.   எனவே முற்றிலுமாக கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி இந்த மாநாடும், இன்று மாலை பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.