Advertisment

ஓட்டுக்கு 1 ரூபாய் கூடக் கொடுக்காமல் ஜெயித்திருக்கிறேன் - திருநாவுக்கரசர் 

திருச்சி எம்.பி. தேர்தலில் திமுகக் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரும் அதிமுகக் கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனும் , அமமுக கட்சியின் சார்பில் திருச்சி முன்னாள் மேயர் சாருபாலாவும், நாம் தமிழர் கட்சியில் கார்த்தியும், மக்கள்நீதி மய்யத்தின் சார்பில் ஆனந்தராஜீ போட்டியிட்டனர்.

Advertisment

n

இன்று தேர்வு முடிகள் திருச்சி சாரநாதன் பொறியில் கல்லூரியில் காலை 8.00 மணி முதல் வாக்குகள் எண்ண ஆரம்பித்தார்கள். இதில் 2 சுற்று முடிவில் காங்கிரஸ் - 59 254, தேமுதிக - 15,711, மக்கள் நீதி மய்யம் - 3582, அமமுக 10.478, நாம் தமிழர் - 6845, நோட்டா - 1407 திருநாவுக்கரசர் 43,543 வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருக்கிறார். இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்குத் திமுக மா.செ. கே.என்.நேரு மற்றும் வேட்பாளர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஒரு சேர வந்து பார்வையிட்டனர்.

Advertisment

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகம் முழுவதும் வரும் செய்திகள் நம்பிக்கை தருவதாக இருக்கிறது. என்னுடைய வெற்றிக்கு உழைத்த மா.செ. கே.என்.நேரு உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். பிஜேபிக்கும் , காங்கிரசுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை. தொங்கும் பாரளுமன்றம் தான் வரும். ராகுல்காந்திக்கு இந்த முறை வாய்ப்பு இல்லை என்றால் அடுத்த முறை கண்டிப்பாக அவர் பிரதமராக வருவார். ஏன்னென்றால் அவருக்கு வயது இருக்கிறது. கடந்த முறை மன்மோகன்சிங் இரண்டாவது முறையாகப் பிரதமாக வரும் போதே ராகுல்காந்தியிடம் கேட்டார்கள். ஆனால் அவர் மறுத்து விட்டார். 100 ஆண்டுக் காலக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பதால் பெரிய திட்டமிடல் இருக்கிறது.

என்னுடைய வெற்றியை பொறுத்தவரையில் நான் இந்தத் தேர்தலில் ஓட்டுக்கு 1ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் திருச்சி மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்றார்.

thirunavukkarasar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe