Advertisment

எஸ்.பி.பி மறைவு... தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி!

spb

மறைந்த திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி.க்கு மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி

Advertisment

தமிழ்த் திரைப்பட உலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்த திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார்.மேலும், இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் அவர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழ், இந்தி,தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், கலைஞர்கள் தொடர்ச்சியாக எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக, மதுரை பொன்மேனி பகுதியில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் எல்லிஸ் நகர் வசந்தம் குடியிருப்பு பொதுமக்கள் சார்பாக மறைந்த எஸ்.பி.பி.க்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துப்பட்டது.இது மட்டுமல்லாது மதுரை மாவட்டத்தில் இசைக்கலைஞர்கள், பொதுமக்கள் ரசிகர்கள் என பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களும் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

madurai spb tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe