Advertisment

ஈரோட்டில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

Advertisment

தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் விழா நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஈரோட்டில் பிறந்து, வாழ்ந்து மறைந்த அவரது இல்லம் நினைவகமாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்கு பெரியாரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெரியாரின் இளம் வயது தோற்றம் முதல் அவர் மறைந்தது வரையிலான பிரம்மாண்டமான புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தந்தை பெரியாரின் பேரனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அரசு துறையைச் சேர்ந்த பல்வேறு அதிகாரிகளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்பு அங்கு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியும் பார்வையிட்டனர். பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உரைகள் ஒலி வடிவில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

Erode periyar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe