Skip to main content

மறைந்த சரவணபவன் ராஜகோபாலுக்கு நக்கீரன் ஆசிரியர், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் அஞ்சலி!

Published on 19/07/2019 | Edited on 20/07/2019

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று  காலமானார். நேற்று மாலை அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது.  

இன்று சென்னை அரசு  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து தற்போது அவரது உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் சொந்தஊரான திருச்செந்தூர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நாளை அங்கு இறுதிச்சடங்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில்  அவரது உடலுக்கு பொதுமக்கள், சரவணபவன் ஊழியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நக்கீரன் ஆசியர், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

எனக்கு பயம் இல்ல... ரஜினி கெத்து யாருக்கு வரும்... மோடியை ரொம்ப பிடிக்கும்... ஜீவஜோதி அதிரடி பேட்டி!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தனது ஹோட்டலில் பணியாற்றிய ராமசாமி என்பவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். இதனால் ஜீவஜோதியின் கணவரான பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் கொலை செய்தார். இந்த குற்றத்தில் ஈடுபட்ட ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆயுள் தண்டனை பெற்ற ராஜகோபால் கடந்தாண்டு மரணமடைந்தார்.

 

jeeva jothi



ஜீவஜோதி தனது கணவர் இறப்புக்கு பிறகு, தஞ்சை மாவட்டத்தில் குடிபெயர்ந்தார். அதன் பின்பு தன் பள்ளி நண்பரை மறுமணம் செய்து தற்போது, வல்லம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அருகே, தன் தந்தை ராமசாமி பெயரில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அரசியலுக்கு வர ஆசைப்பட்ட ஜீவஜோதி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.  அரசியலில் எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் ஆர்வம் இருக்கிறது. ஆர்வம் இருந்தால் போதும்தானே. அதனால்தான் கட்சியில் இணைந்துள்ளேன். என்னுடைய ரோல் மாடல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரை நான் கடவுளுக்கு நிகராக பார்க்கிறேன். நான் இன்று உயிருடன் உங்களுடன் பேசி கொண்டிருப்பதற்கு ஜெயலலிதாதான் காரணம்.

 

jeeva jothi



இந்த நிலையில் சமீபத்தில் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது திட்டங்களை இன்றைய இளைஞர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர் என்றும்,  அதனால்தான் அவருக்கு ஆதரவு பெருகுகிறது என்றும், ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினர் அவரது திட்டங்கள் மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கும் வேலையை செய்கிறார்கள்.. இதையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.. பாதுகாப்புக்காக நான் பாஜகவில் சேரவில்லை.. எனக்கு எப்பவுமே பயம் கிடையாது.. பயம் இருந்திருந்தால் இதற்கு முன்பே ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்திருப்பேன்... தமிழகத்தில் பாஜக வளரவில்லை என்கிறார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜக அசுர வெற்றி பெறுவதை பார்க்கத்தான் போறீங்க.. குடியுரிமை சட்டம் தொடர்பான எதிர்க்கட்சியினருக்கு புரிதல் இல்லை.. அதனால்தான் குற்றம் சாட்டுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்தை நான் ஆதரிக்கிறேன்.. ஏனெனில் பெரியார் பற்றிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றார்.. இந்த கெத்து யாருக்கு வரும்.. இந்த விவகாரத்தில் ரஜினிக்குதான் ஆதரவு பெருகி கொண்டு போகிறது" என்றும் கூறியுள்ளார்.

 

 

Next Story

அரசியல் களத்தில் இறங்கிய ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார்? பாஜகவின் அதிர வைக்கும் திட்டம்!

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

நடிகர் ராதாரவி திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவில் நீக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி இணைந்தார். நடிகர் ராதாரவியை தொடர்ந்து நடிகை நமீதாவும் பாஜகவில் இணைந்தார். வரும் 2021 சட்டமன்ற தேர்தலுக்குள் பாஜக கட்சியை தமிழகத்தில் வலுப்பெற பல்வேறு நடவடிக்கையை பாஜக கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 

jeeva jothi



இந்த நிலையில்  தமிழகத்தில் மிகப் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால், ஜீவஜோதி மற்றும் பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய சில நாட்களில் சரவணபவன் ராஜகோபாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். அப்போது தண்டனையை அனுபவிக்காமலேயே சரவணபவன் ராஜகோபால் மறைந்தது தனக்கு ஏமாற்றம் தருவதாக ஜீவஜோதி கூறியிருந்தார். இந்த நிலையில் சரவணபவன் ராஜகோபால் வழக்கு புகழ் ஜீவஜோதி பாஜகவில் இணைந்தார் என்று கூறுகின்றனர். சமீபத்தில் ஜீவஜோதியை சந்தித்த வானதி சீனிவாசன் உங்களை போன்ற தைரியமான பெண்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ஜீவஜோதி பாஜகவில் இணைந்ததாக கூறுகின்றனர். 


சமீபத்தில் பாஜகவினர் தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் நபர்களை கட்சியில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஜீவஜோதி நன்கு பேசக்கூடியவர், எதையும் சமாளிக்கும் தைரியம் இருக்கும் பெண் என்ற காரணத்தினால் பாஜகவில் சேர்த்ததாகஅக்கட்சியினர் கூறிவருகின்றனர். அதேபோல் அரசியலில் சில கட்சிகளில் ஜீவஜோதியின் உறவினர்கள் பெரிய பொறுப்புகளில் இருக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.   

 

CAB