Advertisment

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

 Tribute to Edappadi Palaniswami at MGR Memorial

Advertisment

முன்னாள் முதல்வரும் அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்ஜிஆரின் 36 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மற்றும் அவரது தொண்டர்கள், ரசிகர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகின்றனர். இந்தநிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் எடப்பாடி பழனிச்சாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஆர்.பி.விஜயகுமார், வேலுமணி, பொன்னையன், வளர்மதி, அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன்,எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

admk Memorial
இதையும் படியுங்கள்
Subscribe