அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை! (படங்கள்)

தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான் மு.க.ஸ்டாலின் இன்று (03/02/2022) பேரறிஞர் அண்ணாவின் 53- வது நினைவு நாளையொட்டி, சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினார். அதேபோல், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதைச் செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Anna Chennai chiefminister merina
இதையும் படியுங்கள்
Subscribe