ஈழ விடுதலைக்கான போரில் மே 18- ஆம் தேதி அன்று முள்ளி வாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்க நினைத்த தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தநாளை உலக நாடுகளில் உள்ள தமிழின உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், மே 18- ஆம் தேதி அன்று பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு வந்த நிலையில், அதற்காக பட்டாசு வெடித்த உணர்வாளர்கள் இரவில் 'முள்ளிவாய்க்கால் மே.18' சம்பவத்திற்காக கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினர்.