தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அருகே உள்ள அண்ணா சிலைக்கு பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையிலும் அமைச்சர் துரைமுருகன் சென்னையிலும் மரியாதை செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில் திராவிடர் கழகம் சார்பில் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி அண்ணா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment