Advertisment

பள்ளியில் சேர்ந்த பழங்குடி மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து வரவேற்பு

nn

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பில் அப்பகுதியில் உள்ள இருளர் பழங்குடியினமாணவர்கள் 23 பேர் கல்வி கற்க புதிதாக இணைந்துள்ளனர்.

Advertisment

கிள்ளை பேரூராட்சி மன்ற துணைதலைவர் கிள்ளை ரவீந்திரன் தலைமையில் அவர்களுக்கு மாலை, தலையில் கிரீடம் அணிவிக்கப்பட்டுஒரு வண்டியில் அமர வைத்து ஒலிபெருக்கி மூலம் கல்வி குறித்தும், கல்வி கற்றால் என்ன நன்மை கிடைக்கும் எனவும்இருளர் பழங்குடியினசமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

இதனைத் தொடர்ந்து புதியதாகக் கல்வி கற்க வந்த அனைத்து மாணவர்களையும் வரவேற்கும் விதமாக கை தட்டி வாழ்த்துகூறி வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் குமரவேல், பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜசேகர், கந்தசாமி, பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, பள்ளியின் கல்விக் குழுத் தலைவர் சூர்யா, கிராம தலைவர் செஞ்சி சின்னமணி, சத்தியமூர்த்தி, செல்லதுரை, கோதண்டபாணி மற்றும் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tribal awareness education CHITHAMPARAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe