Advertisment

காட்டுயானையை விரட்டக் கோரி மலைவாழ் மக்கள் போராட்டம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தி வரும் காட்டு யானையை விரட்டகோரி அப்பகுதி மலைவாழ் மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

 Tribal people protest

கோவை பொள்ளாச்சியில்நவமலை பகுதி ஆற்றங்கரை ஓரமாக 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களை சேர்ந்த குடும்பங்கள் வாழ்த்து வருகின்றன. இப்பகுதியில் இரவு நேரங்களில் காட்டுயானைகள் அப்பகுதிகளுக்கு வந்து அச்சுறுத்தி வந்த நிலையில்காட்டுயானை தாக்கி கடந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளை அப்பகுதி மலைவாழ் மக்கள் சிறைபிடித்து முற்றுகையிட்டனர்.

Advertisment

 Tribal people protest

தங்கள் வாழ்விடங்களுக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து அச்சுறுத்துவதாக கூறிய பொதுமக்கள் கும்கி யானையை கொண்டு காட்டுயானைகளை விரட்டியடிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களை சமாதானம் செய்த அதிகாரிகள் முகாமில் உள்ளகும்கி யானைகளை கொண்டு காட்டுயானைகளை விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை பொதுமக்கள் இரவில்அப்பகுதியில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் தாங்கிக்கொள்ளலாம்என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

forest protest wild elephant
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe