/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spk seyyadurai 11.jpg)
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். செய்யாதுரை வீட்டில் 8 மணி நேரமாக சோதனை தொடர்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் செய்யாதுரை மற்றும் அவருடைய மகன் நாகராஜுவின் சென்னை மற்றும் அருப்புக்கோட்டை அலுவலகங்கள், வீடுகள், மதுரை விடுதி என்று 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை . அந்த அசோதனையில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள், பணக்கட்டுகள், பெட்டி பெட்டியாக தங்கம் சிக்கின. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் இன்று இரு வாகனங்களில் மீண்டும் அருப்புக்கோட்டை வந்த வருமான வரித்துறையினர் செய்யாதுரையின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9.30 மணிக்கு மேலும் தொடர்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)