Trial prisoner incident in branch jail thiruvannamalai

கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிஉயிரிழந்ததற்கு காவல்துறையினர் தாக்கியதே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், தட்டரனை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர், சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த ஏப்ரல் 26- ஆம் தேதி அன்று அவரை விசாரணை செய்ய, காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் படி, அவரை திருவண்ணாமலை கிளைச்சிறையில் நேற்று முன்தினம் (26/04/2022) அடைத்துள்ளனர்.

Advertisment

நேற்று (27/04/2022) காலை தங்கமணிக்கு வலிப்பு வந்ததாகவும், அவர் அன்று மாலையே உயிரிழந்ததாகவும், உறவினர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் தாக்கியதால் தான் தங்கமணி உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.