Advertisment

கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புகாரில் சோதனை!

Trial on complaint of adding property worth crores!

வருமானத்தைவிட 100 மடங்கிற்கு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக வந்த புகார் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் முருகானந்தம், அவரின் சகோதரர்களான ஒப்பந்ததாரர் பழனிவேல் மற்றும் அரசு ஊழியர் ரவிச்சந்திரன் ஆகியோரின் வீடுகள் உட்பட ஆறு இடங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் ஆறு குழுக்களாகப் பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். காலை முதல் நடைபெற்று வரும் சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இதனிடையே, முருகானந்தம்மனைவி காந்திமதி மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முருகானந்தத்தின் மனைவி காந்திமதி முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

raid vigilance officers PUDUKKOTTAI DISTRICT
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe