trial attempt; Traffic change in Chennai tomorrow

சென்னையில் மெட்ரோ பணி காரணமாக சோதனை ஓட்டமாக பல இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய பகுதிகளில் மூன்றாம் தேதி மட்டும் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சேத்துப்பட்டிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியே வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் செல்லும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.