Advertisment

''தொண்டர்கள், ஒற்றுமை...''-ட்ரெண்டாகும் ஒன்றை வார்த்தை ட்வீட்கள்!

சில நாட்களாக ஒரு வார்த்தையை மட்டும் டிவிட்டரில் பதிவிடும் முறை ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு பிரபலங்கள் தங்களுக்குப் பிடித்த ஒரு வார்த்தையை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisment

நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ்' என்ற வார்த்தை பதிவிடப்பட்டுள்ளது. திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவரது டிவிட்டர் பக்கத்தில் 'உடன்பிறப்பு' என்ற வார்த்தையைப் பதிவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'திராவிடம்' என பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'தமிழ்த்தேசியம்' என்ற வார்த்தையைப் பதிவிட்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவரது டிவிட்டர் பக்கத்தில் மை (My) என அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் 'எடப்பாடியார்' என பதிவிட்டப்பட்டிருந்தது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு என்றும், ஓபிஎஸ்-இன் டிவிட்டர் பக்கத்தில் 'தொண்டர்கள்' என்றும், சசிகலாவின் டிவிட்டர் பக்கத்தில் 'ஒற்றுமை' என்றும், டி.டி.வி.தினகரன் டிவிட்டர் பக்கத்தில் 'அம்மா' என்றும் பதிவிடப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'மக்கள்' என்ற ஒற்றை வார்த்தையை பதிவிட்டுள்ளார். திருமாவளவன் அவரது டிவிட்டர் பக்கத்தில் 'சனநாயகம்' என பதிவிட்டுள்ளார். பாஜகவின் வானதி சீனிவாசன் 'வீரப்பெண்மை' என பதிவிட்டுள்ளார்.

இப்படி பலரும் தங்களுக்குப் பிடித்த ஒற்றை வார்த்தையை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

admk edappadi pazhaniswamy O Panneerselvam sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe