திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டிகிராமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் பழையஆழ்குழாய் கிணற்றுக்குள் தவறி விழுந்து மத்திய, மாநில அரசுகள்உள்பட பல்வேறு தன்னார்வலர்களும் 80 மணி நேரம் 600 பேர்கள் வரைபோராடியும் இறுதியாக துண்டு துண்டுகளாக சடலமாக மீட்கப்பட்டதாககூறப்படுகிறது. இந்தியாவில் இனியும் இப்படி ஒரு சம்பவம்நடந்துவிடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள், பயன்பாட்டில்இல்லாத பழைய ஆபத்தான ஆழ்குழாய் கிணறுகளை மழைநீர் சேமிப்புதொட்டிகளாகவும், பயன்படுத்த முடியாத கிணறுகளை மூடவும்உத்தரவிட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சிலநாட்களில் ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் பாதுகாப்பாக மூடப்பட்டதாகமாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறினார்.
இந்த நிலையில் தான் சுர்ஜித் பலியாகி ஒரு வாரம் கூடமுடியாத நிலையில் ஹரியான மாநிலத்தில் ஒரு 5 வயது குழந்தைஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சிசம்பவம் நடந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் சுர்ஜித்நினைவாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம்பகுதியில் உள்ள 'நமது நண்பர்கள்' இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள்ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களிடம் விழிப்புணர்வுதுண்டுபிரசுரங்களை வழங்குவதுடன் சுர்ஜித் நினைவாகமரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டனர்.
அந்த நிகழ்ச்சி இன்று அறந்தாங்கி நகராட்சி நடுநிலைப் பள்ளிவளாகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்டஅதிகாரி திராவிடச்செல்வம், நமது நண்பர்கள் குழுவினர் மற்றும்அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அப்போது மாணவர்கள், "ஆழ்குழாய் கிணறு ஆபத்தானது.. அதன்அருகில் செல்ல மாட்டோம்..எங்கேனும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதையோ,நிற்பதையோ கண்டால் அவர்களை அவர்களின் வீட்டில் கொண்டுபோய் சேர்ப்போம்.மூடப்படாத ஆழ்துளைக் கிணறு மற்றும் குழிகளைக் கண்டால்பெரியவர்களிடம் கூறுவோம்.பெரியவர்களின் துணை இல்லாமல் ஆறு, குளம், குட்டை, கிணறுபகுதிகளுக்கு செல்லமாட்டோம்.பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் அனுமதி இல்லாமல் பள்ளிவளாகத்தைவிட்டு செல்லமாட்டோம்.அன்புத் தம்பி சுர்ஜித் நினைவாக எங்கள் வீட்டில் ஒரு மரக்கன்றுநட்டு வளர்ப்போம்" என்று அறந்தாங்கி, ஆவணத்தான்கோட்டை, வடக்கு,மேற்கு, ராஜேந்திரபுரம், குருந்திரகோட்டை, திருநாளூர், பூவைமாநர்மற்றும் பல கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் பள்ளி மாணவ,மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதுடன் நமது நண்பர்கள்இயக்கம் கொடுத்த விழிப்புணர்வு துண்டறிக்கையுடன் மரக்கன்றுகளைபெற்று வீடுகளில் நட்டுள்ளனர்.
இதே போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ளபள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திமரக்கன்றுகளை நடவும், சுர்ஜித் நினைவாக புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் திட்டம்உள்ளது என்றனர் நமது நண்பர்கள் குழுவினர்.