புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மிதமான முதல் கன மழையும் பெய்து வருகிறது. கனமழை பெய்தாலும் கூட மழைத்தண்ணீர் நீர்நிலைகளுக்குச்செல்லாதவகையில் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளது.
இன்று புதன் கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. புதுக்கோட்டை நகரில் ஒரு மணி மழை பெய்தது. அப்போது இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது ஒரு பழமையான மரம் திடீரென எதிர் திசையில் சாய்ந்ததால் மாணவிகள் அலறிக் கொண்டு ஓடியுள்ளனர். பள்ளியின் முதல் நாளான இன்று மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வந்து திரும்பும் போது எதிர் திசையில் மரம் சாய்ந்ததால் உயிர் பிழைத்தோம். முதல் நாளே எங்களைப் பதைபதைக்க வைத்துவிட்டது என்கிறார்கள் மாணவிகள்.