
சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை அகற்றும்பொழுது மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூரிலிருந்து பாபநாசம் வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வரும் நிலையில் நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரம் வரைசாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இன்று பத்தமடையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்களை ஜேசிபி மூலம் அகற்றிய பொழுது மரக்கிளை ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண், ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர். எந்த ஒரு அறிவிப்பையும் முன்னரே கொடுக்காமல் மரங்களை அகற்றும் பணி நடைபெற்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)