திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்தடை ஏற்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு முதலுதவி அளித்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்த முதியவர் ஒருவர் இரவு நேரத்தில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அப்போது திடீரென மருத்துவமனை வளாகத்தில் மின்தடை ஏற்பட்டது. காயமடைந்தவர் துடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு அவசரமாகமுதலுதவி செய்ய வேண்டும் சூழ்நிலை இருந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் செல்போன் லைட்களை ஒளிரவிட்ட நிலையில், அந்த வெளிச்சத்தின் மூலம் மருத்துவர்கள் செவிலியர்களும் முதியவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள்சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.