Advertisment

அதிமுகவில் இணைந்த அமமுகவின் பொருளாளர்

nn

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தொடர்ந்துஅதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது. மறுபுறம்ஓபிஎஸ் தரப்பு நாளை திருச்சியில் பிரமாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

இந்தநிலையில் டி.டி.வி.தினகரனின் அமமுகவில் பொருளாளராக இருந்த ஆர்.மனோகரன் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார் ஆர்.மனோகரன். அவருக்கு சால்வை அணிவித்து எடப்பாடி பழனிசாமி வரவேற்பளித்தார். அதிமுகவில் மனோகரன் இணைந்ததன் மூலம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக பலம் கூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து மனோகரன் பிரிந்து சென்றது அக்கட்சியில் பெரிய இழப்பாக கருதப்படுகிறது.

Advertisment

ammk admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe