Skip to main content

கணவனுக்கு துரோகம்! கார் டிரைவருடன் ஓடிய பார்வதி தீக்குளித்து இறந்த பரிதாபம்!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

 

pmk


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் பார்வதி. நேற்று 19 ந் தேதி மாலை குமாரபாளையம் காவல் நிலையம் சென்ற பார்வதி திடிரென உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ வைத்துக் கொன்டார்.   போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் உடலில் பற்றிய தீயை அணைத்து ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

 

கோவை பீளமேட்டை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி பார்வதி. இவர்களிடம் கார் ஒட்டுனராக வேலை செய்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன்.  சில நாட்களில் பார்வதி- ஈஸ்வரன் கள்ள தொடர்பு ஏற்பட்டு பிறகு பார்வதி  கணவனை விட்டு பிரிந்து ஈஸ்வரனோடு குமாரபாளையம் வந்து இருவரும் குடும்பம் நடத்தினார்கள். ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமனமாகி மல்லிகா என்ற மனைவி உண்டு.

 

pmk

 

 இந்நிலையில் பார்வதி கோவையில் இருந்த சொத்துக்களை விற்று சுமார் 1.50 கோடி வரை ஈஸ்வரனுக்கு அவ்வப்போது கொடுத்து வந்துள்ளார். பார்வதி மீதான ஈஸ்வரனின் மோகம் நாளுக்கு நாள் குறைய தொடங்கியது. பார்வதி வீட்டுக்குச் செல்வதை ஈஸ்வரன் தவிர்த்து வர இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதனால் தான் கொடுத்த பணத்தை திருப்பி தர வேன்டும் என குமாரபாளையம் காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்துள்ளார்.   இதன் பிறகு  ஈஸ்வரன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, சகோதர் ஜம்பு என்பவர் பார்வதியை கடுமையாக மிரட்டியுள்ளனர்.  இதையும் காவல் நிலையத்தில் பார்வதி புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனமுடைந்து காவல் நிலையத்திற்கு முன்பே போய் உடலில் மண்ணென்னை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

 

pmk


பார்வதியின் மகளுக்கு திருமணமாகி கோவையில்  ஒரு மகன் உள்ளான்.  குமாரபாளையத்தில் படித்து வருகிறான்.


அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக தாலி கட்டிய கணவனை விட்டு விட்டு கள்ளக்காதலுடன் ஊர் விட்டு ஊர் வந்து இப்போது உயிரையே விட்டு விட்டாள் இந்த பார்வதி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெறுப்புக்கு எதிராக வாக்களியுங்கள்” - பார்வதி வேண்டுகோள்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
actress parvathy request to voters for election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். 

இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“இந்திய மக்களாகிய நாங்கள்...” - ஒன்று திரண்ட மலையாளத் திரையுலகினர்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
malayalam actors shared indian constitution page in his social media

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவியுள்ளார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விஷால் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மலையாள திரைப் பிரபலங்களான பார்வதி, இயக்குநர் ஜோ பேபி, நடிகர் ஆஷிக் அபு உள்ளிட்ட பலர், அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அதில், “இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை (இறையாண்மை சோசலிஸ்ட் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு) நாடாகவும் மற்றும் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கு உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்” என சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம், நீதி என்ற குறிப்புகள் அடங்கிய பக்கம் இடம் பெற்றுள்ளன.