Skip to main content

‘துரோக அதிமுக; பாசிச பாஜக; இதுதான் சரியான நேரம்’ - கருணாஸ் எடுத்த முடிவு

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
'Treacherous AIADMK; Fascist BJP'; This is the right time' - Karunas decided

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று அதிமுக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திமுகவும் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், பாஜக கூட்டணியில் தற்போது வரை ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரசுக்கு சீட்டு ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளிக்க இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 'மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி இந்தியாவில் மத நல்லிணக்கம் மாண்புற, சமூக நீதியைக் காக்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். தமிழ்நாட்டில் அடிமை துரோக கட்சியான அதிமுகவை தேர்தலில் தோற்கடிக்க நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பு. பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் அணியாக இணைய வேண்டியிருக்கிறது. பாஜக வென்றால் மோடி ஆட்சி இந்திய கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக் கூடாரமாக மாறிவிடும். எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு விவகாரம்; காங்கிரஸ் - திமுக முக்கிய முடிவு!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
NEET Exam Issue; Congress - DMK important result

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (22.07.2024) தொடங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதனையொட்டி 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (23.07.24) தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரம், நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்பனை ஆகியவை குறித்தும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் எழுப்ப உள்ளனர்.  அதன்படி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி ஆகியோர் இன்றைய கேள்வி நேரத்தில் எழுப்ப உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

'இதுவே கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது'-அதிர்ச்சி கொடுத்த ஜோ பைடன்

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 'I hope this is good for the party and the country' - shocked Joe Biden

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனும், அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளதாக இருந்தது. இந்நிலையில் அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 'மிஞ்சியிருக்கும் தனது பதவி காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவேன்; இதுவே எனது கட்சிக்கும் நாட்டுக்கும் நல்லது என நம்புகிறேன்' என அறிக்கை வாயிலாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.