
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் மாற்றம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் ராஜ்பவனிலிருந்து வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக உள்ள டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகி இருந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜாவிற்கான பதவியேற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

முதல்வர் முன்னிலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தமிழ்நாடு அரசுதலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவருக்கானதுறை என்ன என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியேற்புக்கு பின்னர் தமிழக முதல்வர் மற்றும் ஆளுநருடன் அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Follow Us