Advertisment

படிக்கட்டில் பயணம்... தட்டிக்கேட்ட பேருந்து டிரைவரை தாக்கிய மாணவர்!

Traveling on the stairs.. The student attacked the bus driver who knocked!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பணிமனையில் இருந்து புதுக்கோட்டை, அன்னவாசல் வழியாக இலுப்பூர் செல்லும் அரசு டவுன் பஸ்சை இன்று வையம்பட்டியை சேர்ந்த டிரைவர் சரவணன் (வயது 38) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மாலை புதுக்கோட்டை அருங்காட்சியகம் நிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏறியுள்ளனர். பல மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளனர். அதனைப் பார்த்த டிரைவர் சரவணன் மேலே ஏறச் சொன்னதால் அன்னவாசல் கடந்து செல்லும் போது செங்கப்பட்டி பஸ் நிறுத்தத்தில் வைத்து ஐடிஐ மாணவர் ஒருவர் டிரைவரை கடுமையாக தாக்கியதுடன் தகாத வார்த்தைகளில் திட்டிவிட்டு அடுத்து வந்த காலாடிப்பட்டி சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிச் சென்றுவிட்டார்.

Advertisment

Traveling on the stairs.. The student attacked the bus driver who knocked!

படிக்கட்டில் தொங்காமல் மேலே ஏறச் சொன்னதால் டிரைவர் தாக்கப்பட்டதால் பஸ்சை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நின்றது. தகவல் அறிந்து போக்குவரத்துக் கழக ஊழியர்களும் திரண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அரசு பஸ் ஊழியர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி பஸ்சை ஓரமாக நிறுத்தச் செய்தனர். டிரைவரை தாக்கிய மாணவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

student pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe