
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று (06.12.2021) காலை வந்த விமானத்தில் சுமார் 101 பயணிகள் வந்தனர். மத்திய சுகாதாரத்துறையின் வழிமுறைகளைப் பின்பற்றி அவர்களுக்குக் கோவிட் தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பயணிக்கு மட்டும் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒமிக்ரான் தொற்றா என்பதனை ஆய்வுசெய்ய மரபணு சோதனைக்காக சென்னைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் கடந்தவியாழக்கிழமை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சையில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)