Advertisment

படியில் பயணம்; நொடியில் இரு கால்களை இழந்த பள்ளி மாணவன்

Travel in step ; A schoolboy who lost both his legs in an instant

Advertisment

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி மாணவர்கள் அபாயகரமாகப் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் குன்றத்தூரில் அரசுப்பேருந்தில் படியில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவன் தவறி விழுந்ததில் விபத்து ஏற்பட்டு மாணவனின் இரண்டு கால்களும் துண்டான சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குன்றத்தூர் தேரடி பகுதியில் இருந்து 16K என்ற அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அந்த பேருந்தில் பல்வேறு பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தசந்தோஷ் என்ற பதினோராம் வகுப்பு மாணவன் எதிர்பாராத விதமாகப் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் ஏற்பட்ட விபத்தில் மாணவனின் இரு கால்களில் காயங்கள் ஏற்பட்டது.

உடனடியாகப் பள்ளி மாணவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் மாணவனுடைய இரண்டு கால்களையும் அகற்ற வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர். பேருந்தை வேகமாக ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதா என்றகோணத்தில் தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் குறித்து கண்காணிக்க காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனத்தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் இதே குன்றத்தூரில் நடிகை ஒருவர் பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களைக் கண்டித்து தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

kundrathur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe