திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பேருந்து நிறுத்தம் எதிரே வசிப்பவர் வேலு. போளூரில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். கலசப்பாக்கத்தில் உள்ள இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்வம். செல்வம் வீட்டுக்கு வெளியே பூக்கடை வைத்துள்ளார். இங்கு சேரும் குப்பையை பக்கத்து வீட்டு பக்கம் தள்ளிவிடுவதால் இந்த இரண்டு குடும்பத்தாருக்கும் இடையே சண்டை இருந்துவந்துள்ளது.

murder

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மே 5ந் தேதி மாலை இரு குடும்ப பெண்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனை வேலு தடுத்து விலக்கி சமாதானம் செய்துள்ளார். அப்போது செல்வம், அவரது மனைவி, மருமகள், மகன் என 4 பேரும், திடீரென அம்பிகா, வேலு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அடிதாங்க முடியாமல் கத்தி கதறியபடி, இருவரும், இரவு 7 மணியளவில் திருவண்ணாமலை – வேலூர் சாலையில் உள்ள கலசப்பாக்கம் காவல்நிலையத்துக்கு தங்களை காப்பாற்றச்சொல்லி உதவிகேட்க ஓடியுள்ளனர்.

காவல்நிலையத்துக்கு சென்றவர்களை விரட்டி சென்ற செல்வம் குடும்பத்தினர், காவல்நிலையம் வளாகத்திலேயே அடித்து உதைத்துள்ளனர். இதில் வேலு அங்கேயே இறந்துள்ளார். அடித்து உதைத்து மயக்கம் போட்டதாக நினைத்து விட்டுவிட்டு சென்றுள்ளனர். காவல்நிலையம் முன்பு நின்று இருந்தவர்கள் எழுந்துகொள்ளாத அவரை பார்த்தபோது, அவர் நாடித்துடிப்பு அடங்கி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சாதாரண குப்பை பிரச்சனைக்காக அடித்து கொலை செய்த செல்வம், அவரது மனைவி, மருமகள், மகன் என 4 பேரை கைது செய்துள்ளது கலசப்பாக்கம் காவல்துறை.