Advertisment

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சென்னை பல்லவன் இல்லம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் பணத்தைஉரிய கணக்கில் சேர்க்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன்கள், அகவிலைப்படியைஉயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர்.