HHH

Advertisment

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 3ம் தேதியோ அல்லது அதற்கு பிறகோ வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.