போக்குவரத்துத் தொழிலாளர்களின் 14வது ஊதிய முறையை நடைமுறைப்படுத்தாதைகண்டித்து தமிழகம் முழுக்க தொ.மு.ச. உட்பட ஒன்பது தொழிற்சங்கங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

இதில் ஒருபகுதியாக, இன்று திட்டக்குடி பணிமனையில் நடந்த அறவழிப் போராட்டத்தில்,"போக்குவரத்துத் தொழிலாளர்களின் 14வது ஊதிய முறையை நடைமுறைப்படுத்தாது தொழிலாளர்களுக்கு 'பட்டை நாமம்' அடித்த தமிழக அரசைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டம்"எனக் குறிப்பிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில்,திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சிவகணேசன் எம்.எல்.ஏ.கலந்துகொண்டார்.

Advertisment