Advertisment

மாவட்ட எஸ்.பி. தலைமையில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுக்கு சாலை பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்!

ariyalur

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலையில் 08/07/2020 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளர்களுக்கானசிறப்பு ஆலோசனைக் கூட்டம் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

Advertisment

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகளில் சுண்ணாம்புக்கல் ஏற்றும் கனரக வாகனங்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் காவல்துறையினரால் சில நிபந்தனைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.

Advertisment

கனரக வாகனங்களுக்கு முறையான சான்றிதழ்கள் மற்றும் Road Worthy Certificate இருத்தல் அவசியம். முகப்பு விளக்குகளையும், சமிக்ஞைவிளக்குகள் ஒலி எழுப்பான்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும். கனரக வாகனங்களில் speed governor, GPS, CCTV ஆகியவை பொருத்தி கண்காணிக்க வேண்டும். கனரக வாகனங்களில் கண்டிப்பாக கிளீனர் இருக்க வேண்டும்.

வாகனங்களை தினசரி தூய்மைப்படுத்தப்பட்டு சிமெண்ட் நிறுவனங்களின் பெயர்ப் பலகை மற்றும் பதிவு எண் போன்றவை தெளிவாகத் தெரிய வேண்டும். ஓவர்லோடு தவிர்க்கவேண்டும். சுண்ணாம்புக்கல் லாரிகள் முழுமையாக தார்ப்பாய் கொண்டு சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படாத வண்ணம் சுற்றப்பட்டு இருக்கவேண்டும். சாலையில் கனரக வாகனங்கள் 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது. குறிப்பிட்ட வேகத்தில் மட்டும் செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நடைமுறையில் உள்ள மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வாகனங்கள்இயக்கப்பட வேண்டும். சுரங்கத்திலிருந்து லாரிகள் வெளியே வரும்பொழுது டயர்கள் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே சாலையில் இயக்கப்பட வேண்டும். வாகன ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் சரிபார்க்கப்பட்டு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியானவர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட வேண்டும் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் நபர்களை உடனடியாக பணியிலிருந்து நீக்க செய்து தகுதியான நபர்களை பணியமர்த்தப்பட அறிவுறுத்தப்பட்டது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயமாகச் சீருடை மற்றும் பெயர் பொருத்தப்பட்ட பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும்.

http://onelink.to/nknapp

வாகனங்களின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் கண்டிப்பாக ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். இரவில் கண் கூசும் முகப்பு விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக கனரக லாரிகளை இயக்கக் கூடாது. ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது. ஓட்டுனர்கள் வாகனத்தை இயக்கும் பொழுது அலைபேசிபயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு கனரக வாகனமும் போதுமான இடைவெளி விட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாமல் வாகனங்களை இயக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மதிவாணன் உடனிருந்தார்.

Ariyalur District Superintendent of Police Meeting owner Transport
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe