Transport owner assaulted in broad daylight; Exciting Tanjore

Advertisment

தஞ்சாவூரில் பட்டப் பகலில் டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் மற்றும் சாலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் சோழிங்கநல்லூரைச்சேர்ந்தவர் பாபு. காரைக்காலில் இவர் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். நேற்று காலை நண்பருடைய வீட்டில் நடைபெற்ற புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக மகனுடன் காரில் தஞ்சாவூர் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் காரை வழிமறித்த ஒரு கும்பல் பாபுவை சரமாரியாக மகனின் கண் முன்னேயே வெட்டிக் கொன்றது. சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் பாபுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில் சத்யராஜ், முருகேசன், சிவகுமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவரை போலீசார் தேடிவருவதாக தகவல்கள்வெளியாகி உள்ளது. தஞ்சாவூரில் பட்டப் பகலில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.