Advertisment

சென்னை வாழ் மூத்தகுடி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

The Transport Corporation has issued an important announcement to the senior citizens of Chennai

சென்னையில் வசிக்கும் மூத்தகுடி மக்களுக்கு கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் செய்வதற்கான டோக்கன்கள் பெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தொடர்பானஅறிவிப்பைசென்னை மாநகரபோக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் வாழும் மூத்தக்குடி மக்கள் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் மேற்கொள்வதற்காக டோக்கன்கள் வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும். இதற்காக சென்னையில் உள்ள 42 பணி மனைகள், பேருந்து நிலையங்களில் அடையாள அட்டையை மூத்த குடிமக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மூத்தகுடி மக்கள் தங்களுடைய இருப்பிட சான்று, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்விச் சான்று மற்றும் இரண்டு வண்ண புகைப்படங்கள் ஆகியவற்றை கொடுத்து அடையாள அட்டையைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஜூலை 30-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை சென்னையில் உள்ள 42 பணிமனைகளிலும் டோக்கன்கள் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Advertisment

Chennai Transport
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe