Advertisment

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மூன்றாம் பாலினத்தவர்கள்..! 

Transgenders who petitioned the District Collector

Advertisment

திருப்பத்தூர் மாவட்டத்தில்திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி நகரத்தைச்சுற்றி நூற்றுக்கணக்கான மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகள் வசிக்கின்றனர். இவர்கள் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளனர்.

வாடகை வீடுகளும் சில மனிதநேயர்களால் மட்டுமே வழங்கப்படுகின்றன. சராசரி பொதுமக்கள் வீடுகள் வாடகைக்கு தரவும் தயங்குகின்றனர். இதனால் ஊருக்கு வெளியே பாழடைந்த வீடுகளில் வசிக்கின்றனர். இதனால் பல இன்னல்களுக்கு ஆளாகுகின்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 10க்கும் மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள், மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கிக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சித்தலைவர் சிவன் அருளை சந்தித்து மனு ஒன்றை தந்தனர். அதில், எங்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என ஏற்கனவே மனு தந்துள்ளதை நினைவூட்டி இலவச வீட்டு மனை வழங்கக் கோரி நினைவூட்டல் மனு தந்தனர்.

Advertisment

அந்த மனுவிலேயே தங்களுக்கும் ஆதார் அட்டை, மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை வழங்க வேண்டும். அரசு நலத்திட்ட சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் நம்பிக்கை தந்தார்.

Transgender tirupattur district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe