திருநங்கை சமூகத்திற்கான கிடைமட்ட இடப்பங்கீட்டை வலியுறுத்தியும்அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடம் அருகே திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டப் படிப்பு படித்தும்பல்வேறு தேர்வுகள் எழுதியும் வேலைவாய்ப்பு இல்லாமல் அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படுகிற சூழலில் இருப்பதால் தமிழக அரசு எங்களையும் சக மனிதர்களாகக் கருதி வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்றும், வேலைவாய்ப்பிற்கான கிடைமட்ட இடப்பங்கீட்டினை வழங்க வேண்டும் என்றும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை முழக்கம் வைத்தனர்.