
சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஜான்பாஷா(35) வீட்டில் இருந்து வெளியேறி, புதுவண்ணாரப்பேட்டை நடைபாதையில் தங்கி கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ஜான்பாஷா புது வண்ணாரப்பேட்டை ஏ.சி.ஸ்கீம் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைக் கவனித்த பாதசாரிகள் புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜான் பாஷாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதிக்கு சில திருநங்கைகள் ளை வழக்கம்போல் வந்து சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் அதே பகுதி தேசிய நகரைச் சேர்ந்த குகன் என்ற மலைக்கா(40) என்ற திருநங்கையை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று ஜான்பாஷா மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவரது சட்டை பட்டில் பணம் இருந்ததை தெரிந்து கொண்ட திருநங்கை மலைக்கா, அவரை தகாத பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் ஜான்பாஷா அதனை மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இதுகுறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஜான்பாஷா திருநங்கையை திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த திருநங்கை மலைக்கா ஜான்பாஷாவை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கழுத்திl பலமாக தாக்கியதால் ஜான்பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து திருநங்கை மலைக்காவை போலீசார் கைது செய்தனர்.