


Published on 19/03/2021 | Edited on 19/03/2021
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல், மார்ச் 12ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவுபெற உள்ளது. இதில், இதுவரை 4,544 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மயிலாப்பூர் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் திருநங்கை 'ராதா' என்பவர் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.