மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைத்துத்தான் விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதியை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலளித்திட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

1980- ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் மூன்றாம் பாலினத்தவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவமனையிலிருந்து பெற்ற சான்றிதழை இணைத்துத்தான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

TRANSGENDER PASSPORT CASE CHENNAI HIGH COURT ORDER

இவ்விதிகளை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ‘ஒருவர் தன் பாலின அடையாளத்தைக் கூறுவதென்பது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் என கோருவது சட்டவிரோதம்.’என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக டிசம்பர் 10- ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisment