Advertisment

கொலையா.. தற்கொலையா..? தூக்கில் தொங்கிய திருநங்கை

thirunangai

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ராமச்சந்திரன் பேட்டை ராமன் தெருவில் வசித்து வருபவர் திருநங்கை நளினி. இவருடன் சாரதா என்ற நோய் வாய்ப்பட்ட திருநங்கையும் வசித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நேற்று அருகிலுள்ள மணிமுத்தாறு ஆற்றங்கரையில் உள்ள முட்புதரில் திருநங்கையான நளினி சிறிய உயரமே கொண்ட கருவேல மரத்தில் முழங்காலை மடித்து மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாச்சலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisment

மேலும் இதுகுறித்து காவல்துறையினர் கொலையா.. தற்கொலையா..? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Transgender viruthachalam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe