Advertisment

காசு கொடுக்க மறுத்த வடமாநில தொழிலாளி; சரமாரியாக தாக்கிய திருநங்கைகள்!

Transgender beaten a Northern State worker who refused to pay

திருவள்ளூர் மாவட்டம்அலமாதிகிராம நெடுஞ்சாலையில்மாபுஷெரிப்என்பவர் வாகனவாடகைக்குபஞ்சர் போடும் கடை வைத்துள்ளார். இவரிடம் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கலாம் என்ற தொழிலாளி பணிபுரிந்து வருகிறார். கடையின் உரிமையாளர் மத்திய உணவுக்காகவீட்டிற்குசென்றிருந்த நிலையில்கடையில் இருந்தகலாம் கைப்பேசி காணொளி காட்சி மூலம் சொந்த ஊரில் உள்ள தனது உறவினர்களுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் தருமாறுகேட்டதாகதெரிகிறது.

Advertisment

உரிமையாளர் இல்லாததால் பணம் தர அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த திருநங்கை தன்னுடன் வந்த மேலும் மூன்று திருநங்கைகளை அழைத்து, பணம் தர மறுத்த வட மாநில தொழிலாளியை நான்கு பேரும் சேர்ந்து வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கியதோடு, காலால் எட்டி மிதித்தும், அங்கிருந்தவாகனத்தைகழற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியாலும்கொடூரமாகதாக்கி அவரிடமிருந்துகைபேசி, பணம்ஆகியவற்றைபறித்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

Advertisment

இதுதொடர்பான கண்காணிப்பு கருவியில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான அதைத் தொடர்ந்து, வட மாநிலதொழிலாளியைகொடூரமாகதாக்கிகைபேசி, பணம் ஆகியவற்றைப்பறித்துச் சென்ற திருநங்கைகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIRAL police Transgender
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe