சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரயில் விபத்தால் ஒன்றாவது நடைமேடை சேதமடைந்தது. இதனால் அந்த நடைமேடை மூடப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் நேற்று முதல் இரவு முழுவதும் பணியாற்றி விபத்துக்குள்ளான ரயில் என்ஜினை மீட்டு அப்புறப்படுத்தினர். மேலும் தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில் ஒன்றாம் நடைமேடையில் சேதமடைந்த பகுதிகளை சரிசெய்து வருகின்றனர்.இதனால் இன்று மீண்டும் ஒன்றாம் நடைமேடையில் ரயில் இயக்கப்படுகிறது.

Advertisment