Advertisment

'உருமாறிய கரோனா' பரவல்; மீண்டும் அமலுக்கு வரும் இ-பாஸ்!

corona

Advertisment

தமிழகத்தில் கரோனாதடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது 'உருமாறிய கரோனா'தொற்று பரவிவரும் சூழலில் கரோனாஊரடங்கு கட்டுப்பாடுகளையும்,சிலதளர்வுகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் ஜனவரி31-ஆம் தேதிவரைஏற்கனவே நடைமுறையிலுள்ளதளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 'உருமாறிய கரோனா'வைரஸின்தாக்கத்தைக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தளர்வுகளின்றி ஊரடங்கு அமலில் இருக்கும். ஜனவரி16-ஆம் தேதி காணும் பொங்கலுக்கு சென்னை மெரினா உட்பட எந்தக் கடற்கரையிலும் மக்களுக்குஅனுமதியில்லை. வழிபாட்டுத்தலங்களில் நேர நடைமுறைகளைப் பின்பற்றி மக்கள் தரிசனம் செய்யலாம்.

ஜனவரி1 -ஆம் தேதி முதல் 200 பேர் வரை பங்கேற்கும்சமுதாய, அரசியல் பொதுக்குழு கூட்டம்,விளையாட்டு, கலாச்சாரம், கல்வி, மதம் சார்ந்தகூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களை நடத்தமாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் முன் அனுமதி பெறவேண்டும். திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள்,உள் அரங்கு மற்றும் வெளியரங்குகளில் நடக்கும்படப்பிடிப்புகளில்உச்சவரம்பின்றி பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. 'உருமாறிய கரோனா' காரணமாகவெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு (இ-பாஸ்) அவசியம். புதுச்சேரி,ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர இ-பதிவுதேவையில்லைஎனக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், இந்தத் தளர்வுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என அரசு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். நோய்த் தொற்றுகுறைந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

lock down Tamilnadu govt corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe