'கூண்டோடு ட்ரான்ஸ்பர்'-வருண்குமார் ஐபிஎஸ் அதிரடி

 'Transfer...Transfer...'- Varunkumar IPS action

திருச்சியில் குட்கா கடத்தல் தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் அதை அலட்சியமாக கையாண்டதாக நான்கு காவலர்கள் மற்றும் ஒரு இன்ஸ்பெக்டரை திருச்சி காவல் ஆணையர் வருண்குமார் இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில் 20 மூட்டைகள் குட்கா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 150 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது தெரிய வந்தது.

குட்காவை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரிடம் இருந்த குட்கா மூட்டைகள்,ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில்பறிமுதல்செய்யப்பட்ட குட்கா மற்றும் ரொக்கப் பணம் குறித்து சரியாக கணக்கு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் குட்காவை பறிமுதல் செய்ததிருச்சி ஜியபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன், தலைமைக் காவலர் சரவணன், காவலர்கள் சத்தியமூர்த்தி, அருள் முருகன், ரகுபதி ஆகிய ஐந்து பேரையும் கூண்டோடுஆயுதப்படைக்கு ட்ரான்ஸ்பர் செய்து திருச்சி காவல் ஆணையர் வருண் குமார் உத்தரவிட்டுள்ளார்.

gutka police transfer trichy
இதையும் படியுங்கள்
Subscribe