Published on 03/06/2021 | Edited on 03/06/2021

நெல்லையில் பொதுமக்களை தரக்குறைவாக பேசிய புகாரில் போலீஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் மானூரில் பொதுமக்களை தரக்குறைவாக பேசியதாக எஸ்.ஐ செல்வகுமார் மீது புகார் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி செல்வகுமார் வள்ளியூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட செல்வகுமார் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் செல்வகுமார் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.