Advertisment

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழக அரசு அதிரடி

Advertisment

Transfer of IAS Officers; Tamil Nadu Government takes action

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இது குறித்து தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், “சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராக விஜய கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை இணை செயலாளராக ரத்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ias transferred
இதையும் படியுங்கள்
Subscribe