டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைபணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் மேலாண் இயக்குனராக இருந்தகிர்லோஷ் குமார் குடிசைமாற்று வாரிய மேலாண்மை இயக்குனராகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித் துறை ஆணையராகசி.ஜிதாமஸ் வைத்யனுக்குப் பதிலாக என்.வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பழனி தண்டாயுதபாணி கோயிலின் செயல் அலுவலராக கிராந்திகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் சரவணன் ஈரோடு வணிக வரித்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.